{ தினக்குரல் (கொழும்பு) நாளிதழுக்கு எழுதப்பட்ட இவ்வாரப் பத்தி} இந்தியப் பாராளுமன்றத்திற்கு சென்ற மே 13ந் தேதியுடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒன்றாகக் கூட்டப்பட்டு குடியரசுத் தலைவர் பிரதீபா படீலின் உரை, பாராளுமன்றச் செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு நூல்களின் வெளியீடு, புகழ்பெற்ற இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை விற்பன்னர்களின் கச்சேரிகள் எனக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் உறுதித் தன்மை (steability) குறித்து எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு பெருமை பாராட்டிக் கொண்டனர். [...]
அம்பேத்கர் கார்டூன் பிரச்சினை அ.மார்க்ஸ்
/இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அம்பேத்கர் கார்டூன் பிரச்சினையில் உங்களின் கருத்து என்ன என்று கேட்டது. என் கருத்து அவர்களுக்கு ஒத்து வந்தால் நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்கிற நோக்கில் அவர்களின் பேச்சு இருந்தது, தலித் அமைப்புகள் செய்தது சரியா தவறா என அவர்கள் திருப்பித் திருப்பிக் கேட்டார்கள். சரி எனப் பேச ஒருவரும், தவறு எனப் பேச ஒருவரும் அவர்களுக்குத் தேவை. தலித் அமைப்புகள் இப் பிரச்சினையில் நடந்து கொண்டதை என்னால் ஏற்க இயலவில்லை. எனினும் [...]
புதுச்சேரியில் உன்மை அறியும் குழு மீது தாக்குதல்: கண்டன ஆர்பாட்டம்
சென்ற ஏப்ரல் 30 அன்று புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உறுவையாறு என்னுமிடத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக எங்களின் உண்மை அறியும் குழு விசாரித்துக் கொண்டிருந்தபொழுது போலிசாரால் தூண்டிவிடப்பட்ட சில கையாட்கள் ஒரு வாகனத்தில் மக்களை ஏற்றி வந்து எங்கள் குழுவைச் சுமார் 3 மணி நேரம் முற்றுகை இட்டதோடு எங்கள் கார் கண்ணாடியையும் உடைத்த கதையை ஏற்கனவே எழுதியிருந்தோம். கோ.சுகுமாரன் மற்றும் இதரர் மீது “கொலை செய்து விடுவோம்” என மிரட்டியதாகப் பொய் வழக்கொன்றும் [...]
சாதிவாரிக் கணக்கெடுப்பும் சத்திரிய விவாதமும் அ.மார்க்ஸ்
சத்திரியர் தொடர்பான ஒரு பிரச்சினை எழுந்து ஒருவாறு ஓய்ந்திருக்கிறது. நமது சமூக அமைப்பில் மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டிய விஷயமிது. காலங் காலமாகச் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் அத்தகைய பெயர்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் முயற்சியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘பள்ளர்கள்’ என்கிற அடையாளம் எம்மை இழிவு செய்கிறது, நாங்கள் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’ என ஒரு பிரிவு மக்கள் சொல்லும்போது நாம் என்ன செய்ய இயலும்? இத்தகைய மேல்நிலையாக்கம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் [...]
கே.டானியல் கடிதங்கள்: நூல் விமர்சனம் கானப்பிரபா
“கே.டானியல் கடிதங்கள்” – ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள் “தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை பொதுக்கருத்துக்கள் ஆகிவிடமாட்டாது. சில சந்தர்ப்பங்களில் பொதுக்கருத்துக்கு தனிமனிதக் கருத்து மூலவேராகவும் அமைந்துவிடுகின்றது. “ ( கே டானியல் 15-12-83, “கே.டானியல் கடிதங்கள் ) வெற்றுத்தாள் எடுத்து ஊற்றுப் பேனாவை ஒரு தடவை உதறிவிட்டு எழுதத் தொடங்கினால் மடை திறந்த வெள்ளம் போல தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்து எழுதி முடிப்பது கடிதங்கள் கொடுக்கும் உபகாரம். ஒருவரின் எழுத்தின் போக்கை [...]
கவிஞர் இன்குலாப் : வற்றாத கவி ஊற்றின் இரகசியம் அ.மார்க்ஸ்
{ இன்குலாப் குறித்துத் தோழர் வைகறை வெளியிட உள்ள நூலுக்காக எழுதப்பட்ட குறிப்பு} இன்குலாப்பின் அடுத்த தலைமுறையினன் நான். மார்க்சீயத்தின்பால் பரிச்சயமும் பற்றும் ஏற்கனவே என்னுள் விதைக்கப் பட்டிருந்த போதிலும் மாவோயிசத்தின்மீது, அல்லது நடைமுறை ரீதியாகச் சொன்னால் நக்சல்பாரி இயக்கத்தின்மீது நாட்டம் ஏற்படுவதற்குக் காரணமானவற்றுள் இன்குலாப்பின் கவிதைகளுக்குப் பெரும்பங்குண்டு. எனது முதல் நூல்களில் ஒன்றான “எதுகவிதை”யில் நாம் வாழும் நூற்றாண்டின் மகா கவி என அவரைச் சொல்லியிருப்பேன், அந்த அளவிற்கு அன்று அவர் மீது பைத்தியம். [...]
மாவோயிஸ்டுகள் கடத்திய ஆட்சியர் அ.மார்க்ஸ்
{ கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்” நாளிதழுக்குஎழுதிய பத்திக்கட்டுரை. இரண்டு நாட்களுக்கு முன் எழுதப்பட்டது. கடத்தப்பட்ட ஆட்சியர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இச்செய்தி மகிழ்ச்சியளிக்கும் அதே நேரத்தில் கடத்தப்படும்போது கொல்லப்பட்ட இரு மெய்க்காவலர்களின் நினைவு வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இதற்கு மாவோயிஸ்டுகள் மட்டுமா பொறுப்பு?} இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டிருப்பார். சட்டிஸ்கர் மாநில அரசு தமது நிபந்தனைகள் எதையும் நிறைவேற்றாதபோதும், [...]
கூடங்குளம் இன்று: ஆய்வறிக்கை 3 அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்,ரஜினி
கத்தியின்றி ரத்தமின்றி வன்முறையொன்றை சர்வ வல்லமைகளையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ள அரசு இன்று கூடங்குள எதிர்ப்பாளர்கள்மீது பிரயோகித்துக் கொண்டுள்ளது. சுமார் 250 குற்ற எண்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் புஷ்பராயன். குற்ற எண்கள் பலவற்றில் ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு மற்றும் 5000 பேர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆக மொத்தமாகக் கணக்கிட்டால் 50,000க்கும் மேற்பட்டவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே ஒரு பெரிய கின்னஸ் சாதனைதான் எனச் சொல்லிப் புன்னகைக்கிறார் அரிமாவளவன். [...]
ஏனம் தொழிற்சாலைப் போராட்டம்: கள ஆய்வு அறிக்கை
ஏனம் ரீஜன்சி தொழிற்சாலைக் கதவடைப்பும், காவல்துறை அத்துமீறல்களும்: கள ஆய்வு அறிக்கை புதுச்சேரி ஏப்ரல் 9,2012 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரங்கமான ஏனத்திலுள்ள ரீஜன்சி செராமிக்ஸ் எனும் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தொழிலாளர் போராட்டத்தின் உச்சகட்டமாகச் சென்ற ஜனவரி 27 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் மச்ச சோமேசுவர முரளிமோகன் போலீசரால் அடித்துக் கொல்லப்பட்டார். அதைக் கண்டு கொதித்தெழுந்த அவரது ஆதரவாளர்கள் தொடுத்த [...]
கூடங்குளம்: நம் காலத்தின் மாபெரும் மக்கள் போராட்டம்-1 அ.மார்க்ஸ்
நம் கண்முன் நடந்த, நடந்து கொண்டுள்ள மகத்தான பொராட்டம் கூடங்குளம். மிகத் தந்திரமாக இதை மத்திய மாநில அரசுகள் கையாண்டன. இது குறித்த விரிவான கலந்துரையாடல் தேவை. அவ்வகையில் எழுதப்படும் முதல் கட்டுரை இது. 12 நாட்களுக்கு முன் எழுதப்பட்டது இது.] 1.கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும் [...]